Thursday, April 21, 2011

முகைதின் நாடாளுமன்றத்தில் கூறியதை வெளியில் கூற வேண்டும், நியட் தலைவர் சவால்!

இண்டர்லோக்: முகைதின் நாடாளுமன்றத்தில் கூறியதை வெளியில் கூற வேண்டும், நியட் தலைவர் சவால் 21 Apr | தலைப்பு செய்தி.

ஐந்தாம் பார மாணவர்களுக்கு கட்டாய இலக்கியப் பாடநூலாக்கப்பட்டிருக்கும் இண்டர்லோக் நாவலின் தற்போதைய தகுதி குறித்து துணைப் பிரதமர் முகைதின் யாசின் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுகிறார் என்று தேசிய இண்டர்லோக் நடவடிக்கை குழுவின் (நியட்) தலைவர் இன்று குற்றம் சாட்டினார்.

கடந்த ஜனவரி 28 இல் இண்டர்லோக் மாணவர் பதிப்புக்கான திருத்தங்கள் முற்றுப்பெற்ற பின்னர்தான் பயன்படுத்தப்படும் என்று கூறியிருந்தார் (சினார் நாளிதழ் செய்தி). ஆனால், மார்ச் 23 இல், இந்நூல் பள்ளிகளில் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அமைச்சரை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் கூறினார் (நாடாளுமன்ற ஹேன்சர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது) என்று நியட்டின் தலைவர் தஸ்லிம் முகம்மட் இப்ராகிம் இன்று கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முகைதினுக்கு சவால்

“முகைதின் யாசின் உண்மையைக் கூறவில்லை. நமக்கு உண்மை தெரிய வேண்டும். அவர் நாடாளுமன்றத்தில் கூறியதை நாடாளுமன்றத்திற்கு வெளியில் கூறுமாறு அவருக்கு நியட் சவால் விடுகிறது. அப்போதுதான் உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். இதில் அவரை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதும் அடங்கும்”, என்றார் தஸ்லிம்.


இந்நூலைப் பள்ளிகளில் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது என்று முகைதின் மட்டுமே பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது வரையில் வேறு எந்த ஓர் அமைச்சரோ, கட்சி தலைவர்களோ இது குறித்து பேசவில்லை என்பதை தஸ்லிம் சுட்டிக் காட்டினார்.

“மஇகா, கெராக்கான், மசீச, பிபிபி அல்லது பிகேஆர், டிஎபி ஆகியவற்றின் நிலைப்பாடு என்ன? அவர்களிடமிருந்து நாம் எதனையும் கேள்விப்படவில்லை. ஆனால், இந்தியர்கள் மட்டுமல்லாது சீனர்கள் மற்றும் இதர மக்களிடமிருந்து நாம் நிறையக் கேள்விப்படுகிறோம். அவர்கள் இண்டர்லோக் “வேண்டாம்” என்று தெளிவாக கூறுகின்றனர்”, என்று தஸ்லிம் கூறிக்கொண்டார்.

அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு இவ்விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக நியட் மேற்கொண்ட நடவடிக்கைகளை விரிவாக விளக்கிய தஸ்லிம் அதனால் எவ்வித பலனும் கிட்டவில்லை என்றார்.

“நாங்கள் சரியான தொழிலியல் முறையைப் பின்பற்றி அமைச்சர்களுக்கும், அரசாங்க இலாக தலைமை அதிகாரிகளுக்கும் மற்றும் ஏதேனும் ஒரு வகையில் இப்பிரச்னையில் ஈடுபாடு கொண்டிருந்தவர்களுக்கும் எழுதியிருந்த கடிதங்களில் இவ்விவகாரத்தை எழுப்பியிருந்தோம்.

“பரிவுமிக்க மற்றும் மக்கள் குரலுக்கு செவி சாய்க்கிற” அரசாங்கம் என்றும் அரசாங்க சேவைகள் என்றும் வெகுவாக பேசுபவர்களே ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களை முன்வைத்து இவ்விவகாரம் குறித்து எழுதப்பட்ட கடிதங்களுக்குப் பதில் அளிக்க வேண்டுமே என்ற கடமை உணர்வு இன்றி நடந்து கொண்ட செயல் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

“இந்த விவகாரத்தில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் கூட்டரசுப் பிரதேச முப்திகள் கடைபிடித்து வரும் மௌனம் குறிப்பிடத்தக்கதாகும்”, என்று சினத்துடன் தஸ்லிம் கூறினார்.

“அதிர்ச்சி தரும் விசயங்கள் வெளிவரும்”


நியட் பக்கத்தான் எம்பிகளையும் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவினரையும் சந்தித்து இந்த விவகாரத்தின் உண்மையான நிலையை விளக்கியது. ஆனால், பாரிசான் பின்னிருக்கை எம்பிகள் நியட்டை சந்திக்காமல் சாக்குபோக்கு கூறி வந்தனர். மஇகாவும் அதைத்தான் செய்தது.

“தமது அரசாங்கம் இந்த நாவலை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று ஜனவரி 23 இல் கோரிக்கை விடுத்தவர் மஇகா தலைவர் ஜி. பழனிவேல். அதன் பின்னர் அவர்கள் “ப” என்று எழுத்தைக் குறித்து பேசினர். இப்போது, மௌனமாக இருக்கின்றனர்.

“பிரதமரிடம் தங்களுடைய நிலையை விளக்குவதற்கு நியட் வெறும் 15 நிமிடங்களை ஒதுக்கித் தருமாறு அவரிடம் கேட்டுக்கொண்டது. எதிர்வரும் ஜூன் மாதம் வரையில் அவருக்கு நேரமே கிடையாது என்று நியட்டிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சமூக கேளிக்கை கூட்டங்களில் பல மணி நேரங்களைக் கழிப்பதற்கு அவருக்கு நேரம் இருந்தது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்த ஒன்றே. (நியட் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான எ.இராஜரெத்தினம் குறுக்கிட்டு “மைன்ஸ்சில் போலிவுட் பாணியிலான கேளிக்கையை மூன்று மணி நேரத்திற்கு இடைவிடாது கண்டுகளிப்பதற்கு பிரதமருக்கு நேரம் இருந்தது”, என்றார்.) சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளோம்”, என்று தஸ்லிம் மேலும் கூறினார்.

தஸ்லிம் ஒன்றை மிகத் தெளிவாக கூறினார். “எங்களுடையக் கடிதங்களுக்கு துணைப் பிரதமரிடமிருந்தும் இதர அதிகாரிகளிடமிருந்தும் பதில் கிடைக்காத வரையில், இண்டர்லோக் நாவல் இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானது என்ற எனது நிலைப்பாடு சரியானது என்பதை நான் உறுதியாகக் கொண்டிருப்பேன்”, என்றாரவர்.

அத்துடன் அவர் ஓர் எச்சரிக்கையையும் விடுத்தார்: “சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், அடுத்த சில வாரங்களில் நாங்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடிய சிலவற்றைப் பற்றி பேச வேண்டி வரும்.”

முகைதினுக்கு ஒரு வார கால அவகாசம்

இண்டர்லோக் விவகாரம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிரட்டலாகியுள்ளது என்ற துணைப் பிரதமர் முகைதின் கூற்றை தஸ்லிம் கடுமையாக சாடினார்.

“நாங்கள் ஈடுபட்டிருப்பது அரசாங்கம் செய்தது தவறாகும் என்பதை ஜனநாயக நடைமுறைப்படி அரசாங்கத்திற்கு தெரிவிப்பதுதான். அது எப்படி நாட்டின் பாதுகாப்பிற்கு மிரட்டலாக முடியும்”, என்று அவர் வினவினார்.

“முகைதினின் கூற்றுப்படி அது நாட்டின் பாதுக்காப்பிற்கு மிரட்டலாகி இருந்தால், அதற்கு யார் காரணம்”, என்று வினவிய தஸ்லிம், “அது முகைதின் யாசின்தான்” என்று பதிலும் அளித்தார்.

“அவர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்ததை நாடாளுமன்றத்திற்கு வெளியில் கூறுமாறு நான் விடுத்துள்ள சவாலை ஏற்றுக்கொள்வதற்கு முகைதின் யாசினுக்கு இன்றிலிருந்து ஒரு வாரம் இருக்கிறது”, என்றார் தஸ்லிம்.

நியட் அதன் உந்தும் சக்தியை இழந்து விட்டதா என்ற ஒரு கேள்விக்கு பதில் அளித்த தஸ்லிம், “இல்லை. நாங்கள் முழு வலிமையுடன் இருக்கிறோம். இண்டர்லோக் மீட்டுக்கொள்ளப்படும் வரையில் போராட்டம் முழுவலிமையுடன் தொடரும்”, என்றார்.

You can leave a response, or trackback from your own site.

5 Responses to “இண்டர்லோக்: முகைதின் நாடாளுமன்றத்தில் கூறியதை வெளியில் கூற வேண்டும், நியட் தலைவர் சவால்”

  1. dhas says:

    bravo brother Thasleem, we need Malaysians and NOT Malay-sian !

  2. Virendra says:

    Dear Chairman,
    We need human as a leader to listern to the rakyat. A real leader,Not the dead cow head rule the country which consist of multi ethnic culture people.Challenge until we win. great job keep it up.

  3. Subash Chandraboss says:

    try to do someting be for The ‘MIC’= “Malaysia Idiot Congress’ kill the Indian People…..

  4. vengada says:

    Semoga tuhan merestui dan memberi kekuatan rohani kepada pihak yg berjuang untuk masyarakat.

  5. Thangam says:

    Hats off to you guys. There are many people with you. This is the type of leaders we have. We are not against the novel but we are against it to be a text book. They are trying to brainwash our next generation to shut up . Dear parents explain to your children about our powerful culture, language and our GREAT CONTRIBUTION to this NATION.

No comments:

Post a Comment